இன்று ஆடி கிருத்திகை அறுபடை வீடுகளில்கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது .

by Admin / 09-08-2023 11:46:28am
இன்று ஆடி கிருத்திகை அறுபடை வீடுகளில்கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது .

இன்று ஆடி கிருத்திகை தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருத்தணி திருச்செந்தூர் சுவாமிமலை பழனி பழமுதிர்ச்சோலை திருப்பரங்குன்றம் போன்ற முக்கிய முருக கடவுள் பள்ளிகொண்டிருக்கும் புனித ஸ்தலங்களில் ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு கொண்டிருக்கின்றன முருக பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் எடுத்தும் அழகு குத்தியும் மொட்டை அடித்தும் தங்களுடைய நேர்த்தி கடன்களை எடுத்து வருகின்ற காட்சி மிக அற்புதமாக இறை உணர்வை தூண்டும் முருக வழிபாட்டின் மீது ஆழ்ந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறவர்களுக்கு மேலும் உற்சாகம் தரக்கூடியதாக பக்தி பரவசம் மேல்நிறக் கூடியதாக காட்சிகள் அமைந்து கொண்டிருக்கின்றன முருகா முருகா முருகா என்று எழுதுகிற கோஷங்கள் விண்ணை முட்ட கூடிய அளவிற்கு எதிரொலிக்கின்றனஆடி கார்த்திகை தினத்தன்று அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறும். வழக்கமாக ஆடி ஆடி மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த முருகனுடைய பிறந்த தினமாக இது கொண்டாடப்படுகிறது நேற்று பரணி உற்சவம் நடந்தது இன்று நாளையும் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது நாளை மறுநாள் இந்த தெப்ப உட்சவம் நிறைவு பெறும்

சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை கர்க சங்கராந்தி அன்று தொடங்குகிறது, அதாவது ஜூலை 16. இது உத்தராயண காலம் முடிந்து தட்சிணாயன புண்யகாலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

முருகப்பெருமானின் பிறப்பு நிகழ்வுகள் ஸ்கந்த புராணத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது, அங்கு சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணிலிருந்து முருகனை ஆறு சுடர் வடிவில் படைத்ததாகக் கூறப்படுகிறது. சரவணப் பொய்கையில் 'கார்த்திகைப் பெண்' எனப்படும் ஆறு வான நிம்ஃப்கள் அல்லது கன்னிப் பெண்களால் குழந்தைகளின் வடிவில் இந்த தீப்பிழம்புகள் வளர்க்கப்பட்டன. முருகன் இந்த ஆறு குழந்தைகளில் ஒருவராக பார்வதி தேவியால் இணைக்கப்பட்டார்.

தங்களுடைய தன்னலமற்ற சேவைக்கு வெகுமதியாக- சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி, கார்த்திகைப் பெண்ணை அழியாததாக ஆசீர்வதித்தனர். மேலும், இவர்களை வழிபடுவது முருகப் பெருமானையே வழிபடுவதாகக் காணப்படும். எனவே, கார்த்திகை நட்சத்திரத்தை போற்றுவதன் மூலம் கார்த்திகைப் பெருமானையும் போற்றுகிறார்.

 

இன்று ஆடி கிருத்திகை அறுபடை வீடுகளில்கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது .
 

Tags :

Share via