ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை

by Staff / 12-08-2023 01:20:28pm
ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி டெல்லியில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் இன்று தமிழகம் வரவுள்ளார். அதன் பிறகு அங்கிருக்கு ஊட்டி செல்கிறார். அங்கு, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷை சந்திக்க உள்ளார். பின்னர் ஊட்டியில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக தனது சொந்த தொகுதியான கேரளம் மாநிலம் வயநாட்டிற்கு செல்கிறார். இவரை வரவேற்க தமிழகம் மற்றும் கேரளாவில் கட்சி தொண்டர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via