கேரளா பாடத்திட்டத்தில் போக்சோ விழிப்புணர்வு

by Staff / 17-08-2023 02:01:58pm
கேரளா பாடத்திட்டத்தில் போக்சோ விழிப்புணர்வு

கேரள மாநிலத்தில் வரும் கல்வி ஆண்டு முதல், பள்ளி பாடத்திட்டத்தில், 'போக்சோ' எனப்படும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்த விழிப்புணர்வு பாடங்களை சேர்க்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பாட புத்தகங்களை திறமையான நிபுணர்களை வைத்து விரைவில் தொடங்க உள்ளதாக மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இன்று தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கேரள மாநிலத்தில் அடுத்து வரும் கல்வியாண்டில் அனைத்து வகுப்பு பாடங்களில் சேர்க்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

 

Tags :

Share via