நீட்டை ஒழித்து கட்டுவோம் - உதயநிதி ஸ்டாலின்

by Staff / 01-09-2023 03:53:07pm
நீட்டை ஒழித்து கட்டுவோம் - உதயநிதி ஸ்டாலின்

நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் நினைவு தினத்தையொட்டி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட்டை ஒழித்து கட்டுவோம் என தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், “நீட் ஒழிப்புப் போராளி தங்கை அனிதா நம்மை விட்டுப் பிரிந்து இன்றோடு வருடங்கள் ஆறு ஆகின்றன. ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் தங்கை அனிதாவை நீட் தேர்வு கொலை செய்த வடு நம் மனதில் என்றும் இருக்கும். நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக இறுதிவரை போராடிய தங்கை அனிதா மறைந்த இந்நாளில், ஓர் அண்ணனாக அவரை நினைவு கூர்கிறேன். நீட்டை நிரந்தரமாக நீக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அந்தநாள் நிச்சயம் வரும். நீட்டை ஒழித்து கட்டுவோம்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via