ஆபத்தான பாக்டீரியா.. அமெரிக்காவில் எச்சரிக்கை

by Staff / 08-09-2023 11:26:15am
ஆபத்தான பாக்டீரியா.. அமெரிக்காவில் எச்சரிக்கை

வல்லரசு நாடான அமெரிக்காவை ஒரு ஆபத்தான பாக்டீரியா அச்சுறுத்தி வருகிறது. அந்த நாட்டில் விப்ரியோ வல்னிஃபிகஸ் என்ற பாக்டீரியாவின் பரவலால் அதிகளவில் மக்கள் பாதிப்புக்குள்ளாவது அதிகரித்து வருகின்றது. இதனால் இந்த ஆண்டு 12 பேர் உயிரிழந்துள்ளனர். நோய் கட்டுப்பாட்டு மையம் (சிடிசி) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பாக்டீரியா குறித்து எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. உடலில் உள்ள காயங்கள் மூலம் மனித உடலுக்குள் நுழைந்து படிப்படியாக சதையை உட்கொள்வதாக கூறப்படுகிறது.
 

 

Tags :

Share via