ரூ.21 ஆயிரம் :நவீன கேமரா வசதி விவோ ‘ஒய் 72’ செல்போன் அறிமுகம்

by Editor / 25-07-2021 04:19:20pm
  ரூ.21 ஆயிரம் :நவீன கேமரா வசதி விவோ ‘ஒய் 72’ செல்போன் அறிமுகம்

விவோ நிறுவனம் ஒய்72 மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் புராசசர், இரட்டை கேமரா மற்றும் ஆற்றல்மிக்க பேட்டரி ஆகியவை உள்ளது. ஒட்டு மொத்தமாக, நவீன தொழில்நுட்பத்துடன் பல்வேறு சிறப்பு அம்சங்கள் மற்றும் பிரீமியம் வடிவமைப்புடன் அனைவரும் விரும்பும் வண்ணம் இது வெளி வந்திருக்கிறது.
8ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் விரிவாக்க வசதியுடன் 128 ஜிபி மெமரி கார்டுடன் வெளிவந்துள்ள இதன் விலை 20 ஆயிரத்து 990 ரூபாய் ஆகும். இது இந்தியா முழுவதும் உள்ள சில்லரை விற்பனை ஸ்டோர்கள், விவோ இந்தியா இ ஸ்டோர், அமேசான், பிளிப்கார்ட், பே டிஎம், டாடா கிளிக், பஜாஜ் இஎம்ஐ ஸ்டோர்களிலும் கிடைக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒய்72 ஸ்மார்ட் போனை இந்த குறைந்த விலை பிரிவில் நவீன தொழில்நுட்பத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் விவோ விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது.
5.71 மிமீ கொண்ட மிக மெல்லிதான பிரேம், 185.5 கிராம் எடையில், வெறும் 8.4 மிமீ தடிமனில் இந்த ஸ்மார்ட்போன் பார்ப்பதற்கு மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இதில் உள்ள அகல திரை எச்டி தர ஸ்கிரீன் மூலம் உயர்தர வீடியோ படங்களை வண்ணங்களை மிகவும் துல்லியமாக பார்க்க முடியும். படங்களையும் மிகச் சிறந்த தரத்தில் பார்க்கலாம். மேலும் இதில் கைரேகை சென்சார் மற்றும் கண் சிமிட்டுதல் மூலம் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யும் வசதியும் உள்ளது.
பயணத்தின் போது முக்கியமான தருணங்களை படம் பிடிப்பதற்கு ஏற்ப இரட்டை கேமரா அமைப்பை ஒய்72 கொண்டுள்ளது. இதில் 48எம்பி பிரதான கேமரா உள்ளது. மேலும் இதில் உள்ள 2 எம்பி பொக்கே கேமரா பின்புறத்தை மங்கலாக படம் எடுக்கும் திறன் கொண்டதாகும். மேலும் உங்கள் புகைப்பட அனுபவத்தை மேம்படுத்த உருவப்படங்கள், வீடியோ கால்கள் மற்றும் புகைப்பட அனுபவத்தை மேம்படுத்த எச்டிஆர் தொழில்நுட்பம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
இது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் பிளாஷ் சார்ஜை கொண்டுள்ளது. இதன் காரணமாக பேட்டரி தீர்ந்துவிடும் என்ற பயம் இல்லாமல் நாள் முழுவதும் இந்த ஸ்மார்ட் போனை பயன்படுத்தலாம். இதில் உள்ள வெஜ் தொழில்நுட்பம், பேட்டரியை சேமிக்க உதவுவதோடு எந்நேரமும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள குவால்காம் ஸ்நாப்டிராகன் 480 5ஜி மொபைல் தளம் மிகவும் சக்திமிக்க செயல்திறனை வழங்குகிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போன் சமீபத்திய ஆன்ட்ராய்ட் 11ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. 8ஜிபி ரேம் உடன் வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட் போனில் கூடுதலாக 4ஜிபி ரேமை சேர்த்து அதன் வேகத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு செய்யும்போது உங்களுக்கு விருப்பமான செயலிகளை வேகமாகவும் எளிமையாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இது சிறந்த கேமிங் அனுபவம் மற்றும் அல்ட்ரா கேம் பயன்முறைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இதில் உள்ள நவீன தொழில்நுட்பம் முழுமையான உணர்ச்சிப்பூர்வமான கேமிங் அனுபவத்தை உங்களுக்கு வழங்குகிறது. இதில் உள்ள 4டி கேம் வைபிரேஷன் யதார்த்தமான போர்க்களத்திற்கே உங்களைக் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மிகவும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட் போன்களில் ஒய்72 முதலிடம் வகிக்கிறது. இது மிகவும் அழகான வடிவமைப்பை கொண்டுள்ளது. இது மிகவும் அற்புதமான டிஸ்பிளேயை கொண்டுள்ளது. இதன் விலை 20 ஆயிரத்து 990 ரூபாய் ஆகும். இது இளம் தலைமுறையினர் வாங்கக்கூடிய விலையில் வெளிவந்துள்ளது.

 

Tags :

Share via