டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

by Staff / 12-09-2023 02:53:16pm
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றின் 4வது போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். ஒருவேளை இலங்கை அணி வெற்றி பெற்றால் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். அதோடு, இறுதிப் போட்டிக்கு முன்னேற அடுத்து நடக்க உள்ள வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழல் ஏற்படும்.

 

Tags :

Share via