நீதிமன்றம் நீர் இருப்பை அளவிட வேண்டும்: துரைமுருகன்

by Staff / 14-09-2023 12:51:04pm
நீதிமன்றம் நீர் இருப்பை அளவிட வேண்டும்: துரைமுருகன்

கர்நாடக அணைகளின் நீர் இருப்பை நீதிமன்ற மேற்பார்வையில் மத்திய அரசு அதிகாரிகள் அளவிட வேண்டும் என்று தமிழக நீர்வளத் துறைஅமைச்சர் துரைமுருகன் வலி யுறுத்தி உள்ளார். கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில்அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், இன்று (செப். 13) முதல் 15 நாட்களுக்கு 5000 கன அடி நீரைவிட முடிவெடுக்கப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு என்ன சொல்கிறது என்று பார்க்க வேண்டும். அதன்பின், எங்களுக்கு ஒரே தீர்வு உச்சநீதிமன்றத்தை நாடுவது மட்டுமே. இந்த விவகாரம் தொடர்பாக, வரும் 21 -ம்தேதி உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு வருகிறது. அதன்பின் தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப் படும். தமிழ்நாடு விவசாயிகள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுத்து நிச்சயம் நிவாரணம் வாங்கிதருவோம். இதுதொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றால் சட்ட ரீதியான நடவடிக் கைகள் வலுவிழக்கும். கர்நாடகாவில் உள்ள 4 அணைகளின் நீர் இருப்பு குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வுசெய்ய வேண்டும். இவ்விவகாரத்தில் ‘இண்டியா’ கூட்டணியில் உள்ளகாங்கிரஸ் கட்சியை திமுக வலியுறுத்த வேண்டும் என்பது அவசிய மில்லை. அது எங்களை கெடுக்கும் வேலை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

 

Tags :

Share via