இளைஞரை கடித்துக் குதறிய பிட் புல் நாய்

by Staff / 25-09-2023 12:36:11pm
இளைஞரை கடித்துக் குதறிய பிட் புல் நாய்

அர்ஜென்டினாவில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. இளைஞர் ஒருவர் கடற்கரையில் கடல் நீர் ஸ்கேட்டிங் செய்து கொண்டிந்தார். அப்போது, அந்த நபர் கடற்கரையின் கரையை நெருங்கியபோது, ​​எதிர்பாராத விதமாக அங்கிருந்த பிட் புல் நாய் ஒன்று துரத்தி வந்து அவரைத் தாக்கியது. கண்மூடித்தனமாக கடித்துக் குதறியது. பாதிக்கப்பட்டவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவர்கள் அவருக்கு 18 தையல்கள் போட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. நாய் உரிமையாளர்கள் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

Tags :

Share via