அதிமுகவிலிருந்து  திமுகவுக்கு சென்று மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்பி.

by Editor / 25-09-2023 11:33:04pm
அதிமுகவிலிருந்து  திமுகவுக்கு சென்று மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்பி.

சென்னை அதிமுக தலைமை கழக அலுவலகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் 
பொதுச் செயலாளர்,தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி K. பழனிச்சாமி முன்னிலையில் 
அதிமுகவிலிருந்து  திமுகவுக்கு சென்று மீண்டும் அதிமுகவில்  முன்னாள் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன் இணைந்தார்,மேலும் முன்னாள் அமைச்சரும்,தற்போதைய பாஜக மாநிலத்துணைத்தலைவருமான நயினார் நாகேந்திரனின் அண்ணன் நயினார் வீரபெருமாள் ஆகியோர்  தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர் 
தச்சை N. கணேசராஜா,கழக அமைப்பு செயலாளர்கள் V.கருப்பசாமி பாண்டியன்,A.K.சீனிவாசன்,தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கழக செயலாளர்கள்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன்,கிருஷ்ண முரளி @ குட்டியப்பாஉள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

 

Tags : அதிமுகவிலிருந்து  திமுகவுக்கு சென்று மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்பி.

Share via