திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ. துரை காலமானார்

by Staff / 03-10-2023 11:14:49am
திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ. துரை காலமானார்

பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் வி.ஏ. துரை காலமானார். அவருக்கு வயது 59.நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த துரை நேற்று (அக்.02) இரவு சென்னையில் அவரது வீட்டில் காலமானார். பிதாமகன், கஜேந்திரா, என்னமா கண்ணு, லூட்டி, விவரமான ஆளு, லவ்லி உட்பட பல படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக நீரிழிவு நோயால் அவதிப்பட்ட அவர், மருத்துவ செலவுக்கு பணமின்றி அவதிப்பட்டதை அறிந்து சினிமா பிரபலங்கள் பலரும் உதவி செய்தனர்.
 

 

Tags :

Share via