போர் எதிரொலி - கச்சா எண்ணெய் விலை 5% ஏற்றம்

by Staff / 09-10-2023 11:15:46am
போர் எதிரொலி - கச்சா எண்ணெய் விலை 5% ஏற்றம்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட போர் சூழல் நிலவி வரும் நிலையில், சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5% அதிகரித்துள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 89 டாலராக உயர்ந்துள்ளது. மேலும், அக்.6ஆம் தேதி 84.58 டாலராக இருந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை இன்றைக்கு 89 டாலராக உயர்ந்துள்ளது. மேலும், இருதரப்பினரும் சேர்த்து இதுவரை 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via