நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாம்: டிடிவி தினகரன் பேட்டி

by Staff / 25-10-2023 02:32:17pm
நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாம்: டிடிவி தினகரன் பேட்டி

அம்மா மக்கள் முனேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் டிடிவி தினகரன் தூத்துக்குடியில் செய்தியாளரிடம் பேசினார். அப்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து உரிய நேரத்தில் தெரிவிப்போம். திமுக அரசின் 3-ஆண்டுகால ஆட்சி மக்களை ஏமாற்றுக்கூடியதாகதான் இருக்கின்றது. அதிமுகவில் இருக்ககூடிய ஸ்லிப்பர் செல்கள் உரிய நேரத்தில் வெளியே வருவார்கள். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது என்பது ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் மக்கள்-தான் ஏற்றுகொள்ள வேண்டும். பாரதிய ஜனதா கட்சியை வைத்து எல்லா பலனையும் எடப்பாடி அனுபவித்துவிட்டு தேர்தல் நேரத்தில் பாஜகவிற்கு துரோகம் செய்து வருகின்றார் அவருக்கு துரோகம் செய்வது என்பது அவருக்கு இயற்கையான சுபாகம்-தான் ஏற்கனவே அவரை முதல்வராக்கியவர்களுக்கு துரோகம் செய்தார் இப்பொழுது அதிமுக ஆட்சியை காப்பாற்றி கொடுத்த பாஜக-விற்கு துரோகம் செய்கின்றார். 

 

Tags :

Share via