மருது சகோதரர்கள் சிலைக்கு ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ மரியாதை

by Staff / 27-10-2023 12:21:17pm
மருது சகோதரர்கள் சிலைக்கு ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ மரியாதை

மதுரை அருகே ஆலங்குளத்தில் இன்று காலை மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 222வது குருபூஜையை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் ஆலங்குளத்தில் அமைந்துள்ள மாமன்னர் மருதிருவர்கள் சிலைக்கு மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அய்யப்பன் எம்எல்ஏ மற்றும் எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் இராஜ்மோகன் ஆகியோர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via