மோடிக்கு டுவிட்டரில் 7 கோடி பாலோயர்கள்

by Editor / 29-07-2021 12:58:08pm
மோடிக்கு டுவிட்டரில் 7 கோடி பாலோயர்கள்

பிரதமர் மோடி எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அதனால் அவரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அவரது கருத்துகளை, மக்களுக்கான தகவல்களை அவர் சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்.

குஜராத் முதல்வராக இருந்தபோது கடந்த 2009ல் முதல்முதலாக டுவிட்டரில் இணைந்த அவரை 2010ல் ஒரு லட்சம் பேர் பாலோ (பின்தொடர்பவர்கள்) செய்தனர். 2011ல் 4 லட்சமாக உயர்ந்தது. இப்படியாக உயர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ஜூலையில் 6 கோடியை கடந்த பாலோயர்கள் எண்ணிக்கை தற்போது 7 கோடியை எட்டியுள்ளது.உலக அளவில் அதிக டுவிட்டர் பாலோயர்களை கொண்டவர்களின் பட்டியலில் பிரதமர் 11வது இடத்தில் உள்ளார். 

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா 12.98 கோடி பாலோயர்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவில் மோடிக்கு அடுத்த இடத்தில் 4.5 கோடி பாலோயர்களுடன் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளார்.

பிரதமர் மோடியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 7 கோடியை கடந்த நிலையில், அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக பலரும் #CongratsModiJiFor70M என்ற ஹேஸ்டேக்கில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

Tags :

Share via