கல்வி அரசியல் ஆக்கப்படுகிறது. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி.

by Staff / 04-11-2023 02:16:13pm
கல்வி அரசியல் ஆக்கப்படுகிறது. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி.

மதுரையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்சியில் பங்கேற்பதற்காக தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னையிலிருந்து இன்று விமானம் மூலம் மதுரை வந்தடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். புதிய கல்விக் கொள்கை பற்றிய மாநட்டிற்காக வந்துள்ளேன். எல்லா மாநிலங்களிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் கல்வி அரசியல் ஆக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கல்வியின் அரசியல் தலையீடு அதிகமாக இருக்கிறது. இது மாற்றப்பட வேண்டும். ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட்டிற்கு என்றார்கள். ஆனால் இந்த கையெழுத்து இயக்கத்தின் முதல் கையெழுத்து தான் இது என்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது. பொய் சொல்லி ஆட்சிக்கு வந்து தற்போது நீட்டை பற்றி தெரியாதவர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு ஆளுநருக்குமான விரிசல் காரணத்தால் மக்களுக்கான நலத்திட்டங்கள் பாதிக்கப்படுகிறது என்ற கேள்விக்கு ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேச வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தில் 167 வது பிரிவின்படி மாநிலத்தில் தேவைப்படும்போது எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஆளுநரிடம் சென்று விவாதிக்க வேண்டும். நட்புறவுடன் கூடிய அணுகுமுறையை தமிழக அரசு மேற்கொள்கிறதா என்றால் இல்லை. விருந்திற்கு அழைத்தால் கூட ஏன் புறக்கணிக்க வேண்டும், இதுபோன்ற நேரங்களில் தான் பேச முடியும்

 

Tags :

Share via