சைபர் கிரைம்‌ குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்.

by Editor / 04-11-2023 09:48:52pm
சைபர் கிரைம்‌ குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்.

 திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வழிகாட்டுதலின்படி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  ஆறுமுகம்   அறிவுறுத்தலின்படி திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவலர்களான ரஞ்சித்குமார்,  ராம்நயினார் ஆகியோர் சேர்ந்து வள்ளியூர் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களிடம் இணைய வழியில் நடைபெறும் குற்றங்கள் பற்றியும், Loan App மோசடிகள் குறித்தும், சமூக வலைதள பயன்பாடு குறித்தும், Online Shopping Websites வழியாக நடைபெறும் மோசடி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி குற்றம் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு  சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும்  சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், ஏ.டி.எம் யில் துண்டு பிரசுரங்கள் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இணைய வழி குற்றங்களால் பாதிக்கப்பட்டால் உடனடியாக இலவச தொலைபேசி எண் “1930” வழியாகவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தள வழியாகவும் பொதுமக்கள் புகார் அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


 

 

Tags : சைபர் கிரைம்‌ குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்.

Share via