குரூப் பி, சி பணியாளர்களுக்கு ரூ.7,000 போனஸ்

by Staff / 06-11-2023 05:09:47pm
குரூப் பி, சி பணியாளர்களுக்கு ரூ.7,000 போனஸ்

"டில்லி அரசில் பணியாற்றக்கூடிய, அரசிதழ் பதிவுபெறாத குரூப் பி பணியாளர்கள் மற்றும் குரூப் சி பணியாளர்களுக்கு நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு ரூ.7,000 தீபாவளி போனஸ் வழங்கப்படும். அதன்படி குரூப் பி, சி பணியாளர்கள் 80,000 பேர் பயன் பெறும் வகையில் ரூ.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. என்னுடைய அரசு, பணியாளர்களின் வாழ்க்கை சிறப்படைவதற்கான முயற்சியை எப்போதும் மேற்கொண்டு வருகிறது" என்று டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

 

Tags :

Share via