கலைஞானிக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து

by Staff / 07-11-2023 11:57:54am
கலைஞானிக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து

'உலகநாயகன்' நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கமலுக்கு X தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், 'கலையுலகில் சாதனைகள் படைக்கும் கலைஞானி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நலம் சூழ வாழிய பல்லாண்டு' என குறிப்பிட்டுள்ளார். இதுபோல் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் கமல்ஹசானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via