மருத்துவமனைக்கு குடிநீர் கருவியை பரிசாக வழங்கிய கமல்ஹாசன்
மநீம தலைவர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளையொட்டி, எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு காற்றின் ஈரப்பதம் மூலம் சுத்தமான குடிநீர் இயந்திரத்தை வழங்கினார். இந்தக் கருவியை அரசுக்கு பரிந்துரைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது பிறந்தநாளையொட்டி, "வாயு ஜல்" என்ற குடிநீர் இயந்திரத்தை வழங்கினார். இது காற்றின் ஈரப்பதம் மூலம் சுத்தமான குடிநீர் தரும் RO இயந்திரம் ஆகும்.
Tags :