தமிழகத்தில் தீபாவளி பண்டிகை மிக வெகு விமர்சனையாக கொண்டாடப்பட்டு கொண்டிருக்கின்றது...

by Admin / 12-11-2023 12:26:05pm
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை மிக வெகு விமர்சனையாக கொண்டாடப்பட்டு கொண்டிருக்கின்றது...

 தீபாவளி பண்டிகை இந்து மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று.. இதிகாச புராணங்களில் அடிப்படையாக இப்பண்டிகை கொண்டாடப்பட்டாலும் காலம் காலமாக மக்களினுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு திருவிழாவாகவே இது அமைந்து அனைவருக்கும் மகிழ்ச்சியை வழங்கிக் கொண்டிருக்கின்ற பண்டிகையாகும். இன்று, இந்தியா முழுவதும் தீப ஒளியாக தீபத்திருநாளாக கொண்டாடப்படும் இப்ப பண்டிகை தமிழகத்தில் மிக வெகு விமர்சனையாக கொண்டாடப்பட்டு கொண்டிருக்கின்றது...

அதிகாலையில் இருந்து எண்ணெய் வைத்து குளித்து -புத்தாடை உடுத்தி- பட்டாசுகளை வெடித்து.... சிறியவர் முதல் பெரியவர் வரை மகிழ்ச்சி ஆரவாரத்தோடு தீபாவளி பண்டிகை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.. தங்கள் இல்லங்களில் இருந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் சுற்றத்தார்களுக்கும் இனிப்புகளை பகிர்ந்து அளித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்...

பட்டாசு வெடிப்பதற்கு காலையில் ஒரு மணி நேரமும் மாலையில் ஒரு மணி நேரமும் ஒதுக்கப்பட்டு இருந்தாலும் மக்களினுடைய சந்தோசம் கரை புரண்டு ஓடுவதால் பல்வேறு நிலைகளிலும் அங்கங்கே விடைகளை வெடித்துக் கொண்டிருக்கிறார்கள்'

பட்டாசு வெடித்து சிதறுவது போது தங்களுடைய மகிழ்ச்சியையும் ஆரவாரத்தையும் சிறுவர்களும் இளைஞர்களும் உணர்ந்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

 

Tags :

Share via