58 ஆண்டுகாலமாக கடையநல்லூர் பள்ளிவாசல் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்ட யானையை வனத்துறையினர் முகாமிற்கு கொண்டு சென்றனர்.

by Editor / 28-11-2023 09:03:52am
58 ஆண்டுகாலமாக கடையநல்லூர் பள்ளிவாசல் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்ட யானையை வனத்துறையினர் முகாமிற்கு கொண்டு சென்றனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மெயின் ரோட்டில் மக்தூம் ஞானியார்  பெரிய பள்ளிவாசல் உள்ளது இந்த பள்ளிவாசலில் கடந்த 58 ஆண்டுகளாக ஜெயினி என்கின்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த யானை  பராமரிப்பு குறித்தும் உரிய அனுமதிகள் குறித்தும் வனத்துறை சார்பில் 2005 ஆம் ஆண்டுடன் இந்த யானையினுடைய அனுமதி சீட்டு முடிந்துவிட்ட  நிலையில் கடந்த 18 ஆண்டுகளாக உரிய அனுமதியை பெற வேண்டி வனத்துறை சார்பில் பல்வேறு விதமான முறையில் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் யானைக்கு அனுமதியும், பராமரிப்புக்கு உரிய விதிகளை பின்பற்ற கோரி ஆவணங்களை வனத்துறை சார்பில் கேட்கப்பட்டும்  முறையான ஆவணங்களை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் இருந்து நிர்வாக தரப்பில் வனத்துறைக்கு வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது. மேலும் ஆலயத்திற்கு சொந்தமான யானை என்பதால் அதிகாரிகளும் பல்வேறு இடங்களில் காத்திருந்து சூழலில் பள்ளிவாசல் நிர்வாகம் தரப்பில் உரிய பராமரிப்பு செய்யப்படாமலும் ஆவணங்களை புதுப்பிக்காமல் இருந்ததின் காரணமாகவும் வனத்துறை உயர் அதிகாரிகளின் உடைய உத்தரவின் பேரில்  கடை நல்லூர் வனத்துறை அலுவலர் சுரேஷ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் 27ஆம் தேதி மாலை யானையை வனத்துறையினுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது மேலும் யானையை கொண்டு செல்வதற்கு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததைத்  தொடர்ந்து ஊர் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் வனத்துறையினர் அவர்களிடம் உரிய அனுமதி இல்லாமல் இருப்பதாகவும் பராமரிப்பு  இல்லாதது  காரணமாகவும் யானைக்கு காலில் புண் உள்ளதாகவும் கூறி யானையை வனத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ஆனால் ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து காவல்துறை உதவியோடு வனத்துறையினர் நேற்று நள்ளிரவு பெண் யானை ஜெயினியை லாரி மூலம் ஏற்றி வனத்துறை அலுவலர்கள் மற்றும் வனத்துறை சார்பில் கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் குழுவினர் சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் வனத்துறை அலுவலர் சுரேஷ் தலைமையில் திருச்சியில் உள்ள யானைகள் முகாமிற்கு யானையை கொண்டு சென்றனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழலை இரவில் நிலவியது 58 ஆண்டுகளாக கடையநல்லூர் மக்களின் உணர்வுகளோடும், பள்ளிவாசலில் நடைபெறும் நிகழ்வுகளிலும் கலந்து கொண்ட யானை அந்த மக்களை விட்டு பிரிந்ததால் ஏராளமான பொதுமக்கள் யானையோடு நின்று செல்பி எடுத்துக்கொண்டு கண்ணீர் மல்க யானைக்கு விடை கொடுத்தனர், இந்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தாலும் உரிய அனுமதி இல்லாததின் காரணமாக யானை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

58 ஆண்டுகாலமாக கடையநல்லூர் பள்ளிவாசல் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்ட யானையை வனத்துறையினர் முகாமிற்கு கொண்டு சென்றனர்.
 

Tags : 58 ஆண்டுகாலமாக கடையநல்லூர் பள்ளிவாசல் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்ட யானையை வனத்துறையினர் முகாமிற்கு கொண்டு சென்றனர்.

Share via