குடியுரிமை திருத்த சட்டம்: அமித்ஷா திட்டவட்டம்

by Staff / 29-11-2023 04:50:05pm
குடியுரிமை திருத்த சட்டம்: அமித்ஷா திட்டவட்டம்

கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் கலந்துக்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், மம்தா பானர்ஜியின் ஆட்சியில் ஊழல்,அரசியல் வன்முறை அதிகரித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு மகுடம் சூட்ட வேண்டும். இந்த பேரணியில் திரளாக மக்கள் கலந்துகொண்டது மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அடையாளம். குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு அமல்படுத்தும். அதை யாராலும் தடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினார்.

 

Tags :

Share via