சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 73

by Editor / 12-12-2023 09:53:27am
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 73

இன்று உலகமே உற்று நோக்கும் ஒரு உச்ச நட்சத்திரமாக உயரம் தொட்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். அவர் பெங்களூரில் ஒரு மராத்தி குடும்பத்தில் டிசம்பர் 12, 1950 அன்று பிறந்தார். 1975 ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தில் அறிமுகமான சூப்பர் ஸ்டார் தற்போது 171-வது படத்தில் நடித்து வருகிறார். பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக வலம் வரும் ரஜினிகாந்துக்கு உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Tags : சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 73

Share via