நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள்  4 பேர் சஸ்பெண்ட் 

by Editor / 31-07-2021 11:28:38am
நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள்  4 பேர் சஸ்பெண்ட் 

 

 தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகளின் நெல் கொட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது தொடா்பாக 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளனர்.


அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அந்தந்த பகுதியைச் சோந்த விவசாயிகளின் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படவேண்டிய நிலையில், வேறு மாவட்டங்களில் விவசாயிகளிடம் நெல்லை வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி வந்து டெல்டா மாவட்டங்களிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகாா்கள் எழுந்தன.


இதையடுத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உத்தரவிட்டாா். இதன்பேரில் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்யப்படுகிறது. அப்போது பாபநாசம் அருகே வளத்தாமங்கலத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட போது உரிய ஆவணங்கள் இன்றி கொட்டி வைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ 780 மூட்டைகள் நெல் பறிமுதல் செய்யப்பட்டது.


இதுதொடா்பாக துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடா்ந்து, கொள்முதல் அலுவலா் அழகா்சாமி, பட்டியல் எழுத்தா் முருகானந்தம், உதவியாளா் ராஜேஷ், காவலா் வாசுதேவன் ஆகியோரை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

 

Tags :

Share via