பழைய குற்றாலம் அருவிபகுதி சீரமைக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.

by Editor / 25-12-2023 03:54:49pm
பழைய குற்றாலம் அருவிபகுதி சீரமைக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 17,18 ஆகிய இரண்டு தினங்கள் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் உருவாகி சுற்றுலா பயணிகள் அனைத்து அருவிகளிலும் குளிக்க தொடர்ந்து ஒரு வார காலமாக தடை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக குற்றாலம் பேரருவியில் கடந்த 22 ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பழைய குற்றாலம் அருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியிலும், பெண்கள் செல்லும் நடைப்பதைப் பகுதியிலும் தரைத்த்தளங்கள் மிகவும் சேதம் அடைந்ததை தொடர்ந்து கம்பிகள் வெளியே தெரிய தொடங்கியதால் சுற்றுலா பயணிகள்  மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கு  தடை விதிக்கப்பட்டது. மேலும் அந்த இடங்களில் தற்போது பராமரிப்பு பணிகள் செய்யப்பட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மணல் மூட்டைகளை அந்த பகுதியில்அடுக்கி தற்போது சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு பொதுப்பணித்துறை சார்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் தொடர்ந்து அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக பொதுப்பணித்துறை நீர்வளப்பிரிவு சார்பாகவும், ஆயிரப்பேரி  ஊராட்சி சார்பாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்து வருகிறது. அருவியிலும் நீர்வரத்தும் சீராகவே இருந்து வருகிறது.

 

Tags : பழைய குற்றாலம் அருவிபகுதி சீரமைக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.

Share via