மகிழ்ச்சியாக ஆரம்பிக்க இயலா இன்றைய விடியல் நடிகர் பார்த்திபன்

by Staff / 29-12-2023 12:55:51pm
மகிழ்ச்சியாக ஆரம்பிக்க இயலா இன்றைய விடியல் நடிகர் பார்த்திபன்

மகிழ்ச்சியாக ஆரம்பிக்க இயலா இன்றைய விடியல் என நடிகர் பார்த்திபன் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், விஜயகாந்த் அவர்களின் மறைவில் ‘மனிதம்’ கற்று கொள்வோம்.இதைமட்டுமே நான் வலியுறுத்த விரும்புகிறேன். இந்நேரத்தில் இச்சோகத்தில் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.அது மனைவியை மீறி கணவனையே சுமக்கும் தாயாகி, நீண்ட போராட்டத்திற்கு பின் இறக்கி வைத்திருக்கும் ‘பெண் விஜயகாந்த்’ திருமதி பிரேமலதா அவர்கள்!‌ என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

 

Tags :

Share via