அமைச்சர் கீதாஜீவனுக்கு அன்பில் மகேஷ் புகழாரம்

by Staff / 07-01-2024 03:19:47pm
அமைச்சர் கீதாஜீவனுக்கு அன்பில் மகேஷ் புகழாரம்

திருச்சி தெற்கு மாவட்ட மற்றும் மாநகர திமுக மகளிரணி சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கலைஞரும் மகளிர் மேம்பாடும் என்ற தலைப்பிலான பயிற்சிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் கலந்துகொண்டு உரையாற்றினார். விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், "பெண் சிங்கம் என்று தமிழக முதல்வர் நம் தலைவரால் பாராட்டு பெற்றவர் அமைச்சர் கீதாஜீவன். திராவிட மாடல் அரசால் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அவரது துறையின் கீழ் வருகிறது.   சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் அவர் சிறப்பான பணியாற்றி நமது திராவிட ஆட்சிக்கு பெருமை சேர்த்து வரும் அவரை பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் வாழ்த்துகிறேன். கலைஞரின் முரட்டு பக்தர் முன்னாள் மாவட்ட செயலாளர் என். பெரியசாமியின் மகள் அவர் என்பது பெருமைக்குரியது என்றார்.   நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநில மகளிரணித் தலைவர் ஹெலன் டேவிட்சன், மாநகரக் கழக செயலாளர் மதிவாணன், திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via