7 கோடி ரூபாய் வரை விற்பனை

by Staff / 13-01-2024 05:29:18pm
7 கோடி ரூபாய் வரை விற்பனை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும் இந்த சந்தைக்கு கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் கொண்டுவரப்படும்.
திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை, கோவை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்கவியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் இங்கு சுமார் ரூ. 2 கோடிவரை விற்பனை நடைபெறும். வெளிமாநில ஆடு ரகங்கள் எடைக்கு ஏற்ப 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்பனையானது, மேலும் கேரளா மாநிலத்தில் இருந்தும் சில கால்நடை வளர்ப்பவர்கள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்தனர். வழக்கமான நாட்டு ரகங்களுடன் ஹைதராபாத் ரக காது ஆடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன,மலப்பாரி, பிட்டெல், சிரோகி, தலைச்சேரி, ஜம்னாபாரி உள்ளிட்ட வெளிமாநில ஆடு வகை ரகங்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. தொடர் மழையினால் கடந்த இரண்டு வாரங்களாக விற்பனை மந்தமாக இருந்த நிலையில் இன்று பொங்கல் பண்டிகை வியாபாரம் விறுவிறுப்பாக இருந்ததாகவும், ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது மட்டுமின்றி வெளியில் சற்று அதிகமாக விற்பனையானதாகவும், வளர்ப்பு ஆடுகள் விற்பனை குறைவாக காணப்பட்டது, , கறிக்காக வாங்கும் மாடுகள் விற்பனை அதிகமாக காணப்பட்டதாகவும், ஏழு கோடி ரூபாய் வரைக்கும் இந்த பொங்கல் பண்டிகைக்கு விற்பனை நடைபெற்று இருப்பதாக ஆடு வியாபாரி ராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via