பிரதமர் அரிச்சல் முனைகடற்கரையில் சூரிய நமஸ்காரம்
அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக நாளை காலை பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி சென்றடைவார். காலை 10.25 மணிக்கு அயோத்தி ஹெலிபேடில் இறங்கும் மோடி 10.55 மணிக்கு கோவிலுக்கு செல்வார். பிரதமர் இன்று ராமேஸ்வரம் தனுஷ்கோடி கோதண்டராமர் கோவிலில் வழிபாடு மேற்கொண்டார். ராவணனுடனான போருக்கு பிறகு விபீஷனனை இலங்கையின் மன்னனாக, ராமர் அறிவித்த இடம் என்ற பெருமையை இவ்விடம் பெற்றுள்ளது. அதன் சிறப்பை போற்றும் வகையில் இன்று அரிச்சல் முனை கடற்கரையிலும் சூரிய நமஸ்காரம் செய்து வழிபட்டார்.
Tags : பிரதமர் அரிச்சல் முனைகடற்கரையில் சூரிய நமஸ்காரம்