தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து 70 பேர் பலி

by Staff / 25-01-2024 03:08:22pm
தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து 70 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நாட்டில் தென்மேற்கு கோலிகோரோ பகுதியில் உள்ள கங்காபா மாவட்டத்தில் தங்க சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 19ஆம் தேதி தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது வெளியானது. மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via