உத்தரப்பிரதேசத்தில் உறுதியானது காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி

by Staff / 27-01-2024 03:10:05pm
உத்தரப்பிரதேசத்தில் உறுதியானது காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளில் போட்டியிடும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அதிகாரப்பூர்வமாக எக்ஸ் பதிவில் அறிவித்துள்ளார். 80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் வலுவான கூட்டணி அமைக்க இந்தியா கூட்டணி கட்சிகள் முனைப்பு காட்டி வந்த நிலையில், கூட்டணி உறுதியாகியுள்ளது. இதனிடையே, இந்தியா கூட்டணியில் முதன்முறையாக ஒரு மாநிலத்தில் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

 

Tags :

Share via