தேனி-கேரளா மலைப்பாதையில் விபத்து.. ஒருவர் பலி

by Staff / 22-02-2024 11:43:58am
தேனி-கேரளா மலைப்பாதையில் விபத்து.. ஒருவர் பலி

தமிழ்நாடு - கேரளா மலைப்பாதையில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. தேனி மாவட்டத்தின் தமிழ்நாடு - கேரளா மலைப்பாதையில் வைக்கோல் கட்டுகள் ஏற்றி வந்த மினி லாரி, கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்தது.
பாரம் தாங்காமல் லாரி ஏற்றத்தில் ஏற முடியாததால், வாகனத்தை நிறுத்த பின்பக்க டயரில் கல்லை வைக்க ஓட்டுநர் முருகன், நல்ல தம்பி என்பவரிம் கூறியுள்ளார். அப்போது லாரி பின்னோக்கி வந்து நல்ல தம்பி மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். ஓட்டுநர் முருகனும் படுகாயம் அடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via