விஜயதரணியின் ராஜினாமாவை தான் ஏற்றுக்கொள்வதாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நெல்லையில் தகவல்.

by Editor / 25-02-2024 02:20:34pm
விஜயதரணியின் ராஜினாமாவை தான் ஏற்றுக்கொள்வதாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நெல்லையில் தகவல்.


காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி அக்கட்சியில் இருந்து விலகி  டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதரணி பாஜகவில் இணைந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சியில் பெண்கள் தலைமை இடத்துக்கு வரமுடியாத சூழல் இருப்பதாகவும், இந்த அதிருப்தியில் தான் அக்கட்சியை விட்டு வெளியேறிதாகவும் கூறினார். பாஜகவில் இணைந்த விஜயதரணி, காங். கட்சிக்கு துரோகம் செய்துவிட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் சாடி வருகின்றனர்.

இதையடுத்து, விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக விஜயதரணி அறிவித்தார். மேலும், சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவுக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். இந்நிலையில், விஜயதரணியின் ராஜினாமாவை தான் ஏற்றுக்கொள்வதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விஜயதரணியின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படவில்லை. பாஜகவில் இணைந்த அவர், தான் கைப்பட எழுதிய பதவி விலகல் கடிதத்தை எனக்கு இணையதளம் வழியாக அனுப்பி வைத்தார். இன்று காலை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு அதனை உறுதிப்படுத்தினார். அதன் அடிப்படையில் அவரது பதவி விலகலை நான் ஏற்றுக்கொள்கிறேன்”  என்று தெரிவித்தார்.

 

Tags : விஜயதரணியின் ராஜினாமாவை தான் ஏற்றுக்கொள்வதாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நெல்லையில் தகவல்.

Share via