அதிமுக போருக்கு தயாராகிவிட்டது.. செல்லூர் ராஜு

by Staff / 25-02-2024 04:12:37pm
அதிமுக போருக்கு தயாராகிவிட்டது.. செல்லூர் ராஜு

போருக்கு தயாராவது போல் மக்களவைத் தேர்தலுக்கு அதிமுக தயாராக உள்ளது என மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சர்ச்சை பேச்சுக்களால் இஸ்லாமிய மக்களிடம் வெறுப்பு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். திமுக எம்.பி.க்களை விட வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற போகும் அதிமுக உறுப்பினர்கள் தான் மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பார்கள். தேர்தல் கூட்டணியில் இருக்கும் வரை தான் நண்பர்கள், வெளியேறி விட்டால் எதிரிகள் என அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via