ராதிகாவிற்கு பாஜகவில் கிளம்பிய எதிர்ப்பு

by Staff / 27-03-2024 02:29:36pm
ராதிகாவிற்கு பாஜகவில் கிளம்பிய எதிர்ப்பு

பாஜக சார்பில் நடிகை ராதிகா விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நிர்வாகியான வேதா என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். டெல்லி பாஜக மோடி அணி என்ற பெயரில் அவர் தேர்தலில் போட்டியிடுகிறார். விருதுநகரில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராதிகாவிற்கு எதிராக கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via