பெல் நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து

by Staff / 20-04-2024 11:40:19am
பெல் நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து

ஜார்க்கண்ட் சத்ரா மாவட்டத்தில் உள்ள வடக்கு கரன்புராவில், பெல் (BHEL) நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த சேமிப்பு கிடங்கில் நேற்று (ஏப்ரல் 19) மதியம் 2 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via