பறவைக் காய்ச்சல்: நீலகிரியில் தீவிர சோதனை

by Staff / 21-04-2024 01:37:22pm
பறவைக் காய்ச்சல்: நீலகிரியில் தீவிர சோதனை

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள பண்ணைகளில் வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகள் தொற்று நோய் பாதிப்புக்கு உள்ளாகி இறப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, `ஹெச்5என்1' எனப்படும் பறவைக்காய்ச்சல் தமிழகத்திலும் பரவக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து தமிழக - கேரள எல்லையில் உள்ள 8 சோதனை சாவடிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் நீலகிரி சோதனை சாவடிகளில் தீவிர சோதனை நடைபெறுகிறது. வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றன.

 

Tags :

Share via