கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் - இபிஎஸ் வலியுறுத்தல்

by Staff / 28-04-2024 02:40:37pm
கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் - இபிஎஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் இந்த ஆண்டு நடைபெறும் கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி கட்டணமாக சென்னையில் ரூ.500-ம், இதர மாவட்டங்களில் ரூ.200-ம் கட்டவேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது ஏற்கத்தக்கதல்ல என்று அதிமுக
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,
அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்தி, வழக்கம்போல் கோடை கால சிறப்பு பயிற்சி முகாமிற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via