மோடிக்கு எதிராக கருத்து சொன்ன பாஜக சிறுபான்மை தலைவர் கைது

by Staff / 28-04-2024 03:07:50pm
மோடிக்கு எதிராக கருத்து சொன்ன பாஜக சிறுபான்மை தலைவர் கைது

ராஜஸ்தான் மாநில பிரசாரத்தில் பிரதமர் மோடியின் இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பு பேச்சு சர்ச்சையானது. மோடியின் பேச்சுக்கு ராஜஸ்தான் மாநில பாஜக சிறுபான்மை தலைவர் உஸ்மான் கனி, பிரதமரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம், ஒரு முஸ்லிம் என்பதால், பிரதமர் கூறியதில் நான் பெரும் ஏமாற்றமடைந்தேன் எனத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, கடந்த 25ஆம் தேதி வரை கட்சியிலிருந்து பாஜக நீக்கியது. இந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததால் அவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்

 

Tags :

Share via