தமிழ்நாட்டில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

by Editor / 10-05-2024 09:33:09am
தமிழ்நாட்டில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

தமிழ்நாட்டில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாகியுள்ளது. சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியிருந்த நிலையில், இன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார்.

ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.55% சதவீதம் ஆக உள்ளது. வழக்கம் போலவே மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 94.53%, மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 88.58% பெற்றுள்ளனர். மாணவர்களை விட 5.95% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை http://tnresults.nic.inhttp://dge.tn.nic.in ஆகிய இணையதளங்கள் முலம் அறிந்து கொள்ளலாம். அதே போல் மாணவ, மாணவிகளின் செல்போனுக்கு தேர்வு முடிவுகளை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

 

Tags : தமிழ்நாட்டில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

Share via