ஆட்டோ டிரைவரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி தலை மறைவு.
கோவில்பட்டி நடராஜபுரம் சேர்ந்த சவரிராஜ் மகன் ஞானபிரகாசம்.வயது 47. இவர் உழவர் சந்தை அருகே ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.மேலும் அந்த ஆட்டோ ஸ்டாண்ட் தலைவராகவும் இருந்து வருகிறார் இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆட்டோ ஸ்டாண்ட் அருகே கார் பார்க்கிங் செய்ய வந்த நபருக்கும் ஆட்டோ ஸ்டாண்ட் தலைவர் ஞானப்பிரகாசத்துக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று இரவு உழவர் சந்தை ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்த மர்ம நபர்கள் சிலர் ஆட்டோ ஸ்டாண்ட் தலைவர் ஞான பிரகாசத்தை சுற்றி வளைத்து அரிவாளால் தலை கழுத்து கை கால் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினர். அப்போது ஞான பிரகாசத்தின் அலறல் சத்தத்தை கேட்டு அருகாமையில் டீக்கடை வைத்துள்ள ஞானப்பிரகாசத்தின் உறவினர் புனித மேரி என்பவர் தடுக்க வந்துள்ளார். அவரையும் அந்த மர்ம கும்பல் கைகளில் சரமாரியாக வெட்டி கீழே தள்ளி விட்டு தப்பி ஓடி தலை மறைவாகினர்.
சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் ஞான பிரகாசத்தையும் புனித மேரியையும் மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்து திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆட்டோ ஸ்டாண்டில் கார் பார்க்கிங் செய்ய வந்த நபருக்கும் ஞானப்பிரகாசத்துக்கும் இடையே ஏற்பட்ட தகராறு தான் கொலைவெறி தாக்குதலுக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :