தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்றுமிக கனமழை-வானிலை ஆய்வு மையம்

by Editor / 21-05-2024 10:01:00am
 தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்றுமிக கனமழை-வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடலில் நாளை (மே 22) காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும் என்றும், இது வடகிழக்குத் திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் 24ஆம் தேதி காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தென்தமிழக கடலோரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதனால், தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று (மே 21) மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது.

 

Tags : வானிலை ஆய்வு மையம்

Share via