இரத்தம் வதக்கல் செய்வது எப்படி?

by Admin / 09-08-2021 03:17:36pm
இரத்தம் வதக்கல் செய்வது எப்படி?

தேவை

ஆட்டின் இரத்தம் – 200 கிராம்

எண்ணெய் – 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 6

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

தேங்காய் – 1/2 மூடி

வெங்காயம் – 50 கிராம்

கறிவேப்பிலை – சிறிது

உப்பு – தேவையானது

செய்முறை

இரத்தம் உறைந்து இருக்கும். அதில் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து விட வேண்டும். (பிசைந்தும் சிறு சிறு உருண்டைத் துண்டுகளாக இருக்கும்) பின் தண்ணீரை வடித்து விட வேண்டும். வாணலியில் எண்ணை ஊற்றி நறுக்கிய வெங்காயம், மிளகாய் கருவேப்பிலை போட்டு நன்றாக வதங்கியதும் இரத்தத்தையும் சேர்த்து உப்பு, மஞ்சள் கலந்து கிளற வேண்டும். சீக்கிரம் வெந்து விடும். இறக்கும்போது தேங்காய்ப்பூ போட்டு இறக்கவும் இரத்தம் நிறம் மாறி இருக்கும் உளுந்தம் சுண்டல் மாதிரி இருக்கும். இட்லியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். தனியாகவும் சுண்டல் மாதிரி சாப்பிடலாம்.

 

Tags :

Share via