தெலுங்கானாவில் பள்ளி, கல்லூரிகள் திறக்கxஉயர்நீதிமன்றம் இடைக்கால தடை

by Editor / 31-08-2021 04:20:26pm
தெலுங்கானாவில் பள்ளி, கல்லூரிகள் திறக்கxஉயர்நீதிமன்றம் இடைக்கால தடை

கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. டெல்லி, தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க முடிவு செய்துள்ளன. கொரோனா பாதிப்பு குறைந்து வரும் போதிலும் 3ம் அலை பரவலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தரப்பினர் கல்வி நிலையங்களை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் தெலுங்கானா மாநிலத்தில் மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்து ஆலோசித்த பிறகு செப்டம்பர் 1ம் தேதி அதாவது நாளை முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது. மேலும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டு உள்ளது. இந்நிலையில் கொரோனா கட்டுபாட்டுக்கான நிலையான வழிமுறைகளை உறுதி செய்யாமல் அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறி, இந்த அறிவிப்பை எதிர்த்து தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அம்மாநில அரசின் அறிவிப்பிற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்களிடம் கொரோனா பரவாது என்பதை உறுதி செய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

 

Tags :

Share via