கட்டுப்பாடுகளை நீக்கிய அபுதாபி

by Editor / 04-09-2021 09:59:28am
கட்டுப்பாடுகளை நீக்கிய அபுதாபி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச பயணிகளுக்கு அனைத்து நாடுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அபுதாபி அரசும், தங்கள் நாட்டுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டதுடன், குறிப்பிட்ட காலம் தனிமையில் இருக்க வேண்டும் என அறிவித்திருந்தது. தற்போது கொரோனா பரவல் விகிதம் குறைந்து, தடுப்பூசியின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், கட்டுபாடுகளில் சில தளர்வுகளை அந்நாடு கொண்டுவந்துள்ளது.

புதிதாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்திக்கொண்ட சர்வதேச பயணிகளுக்கு தனிமையில் இருப்பது தேவையில்லை என அபுதாபி அரசு கூறியுள்ளது. செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் இந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வர உள்ளன. அபுதாபியின் அவசரகால மற்றும் பேரிடர் குழு, டிவிட்டரில் வெளியிட்டுள்ள இந்த புதிய அறிவிப்பில், தங்கள் நாட்டுக்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் குவாரன்டைனில் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பு நீக்கப்படுவதாக கூறியுள்ளது.

அவர்கள் பொது இடங்களில் உலவ அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அப்போது, Alhosn app பதிவு செய்யப்பட்ட தகவல் அல்லது தங்கள் நாடு அங்கீகரித்துள்ள அதிகாரப்பூர்வ செயலியில் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றுகளையும், அதன் முடிவுகளையும் காட்ட வேண்டும் என தெளிவுப்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிளுக்கான அனுமதியை வழங்கியதையடுத்து அபுதாபி, புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள் :

கிளம்புவதற்கு முன்பு 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் டெஸ்ட் முடிவுகளை வைத்திருக்க வேண்டும். இந்த சான்று தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மற்றும் செலுத்திக் கொள்ளாதவர்கள் என இருவருக்கும் பொருந்தும்.:

அபுதாபி அரசு வெளியிட்டுள்ள கிரீன் லிஸ்டில் இருக்கும் நாடுகளில் இருந்து அந்நாட்டுக்கு செல்பவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றாலும் பி.சி.ஆர் டெஸ்ட் முடிவுகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு குவாரன்டைன் கிடையாது. ஆனால், அபுதாபிக்கு சென்ற 6 மற்றும் 9 வது நாள் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி புதிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை என்றால், 10 நாட்கள் கட்டாயம் குவாரன்டைனில் இருக்க வேண்டும். அத்துடன் பி.சி.ஆர் டெஸ்ட் வைத்திருக்க வேண்டும்.

 

Tags :

Share via