முதல்வரை பாராட்டிய விஜய்சேதுபதி

by Editor / 10-09-2021 03:11:42pm
முதல்வரை பாராட்டிய விஜய்சேதுபதி

தமிழ்நாடு சட்டசபையில் நடக்கும் விஷயங்களை வீடியோவாக பார்த்து வருகிறேன். நன்றாக இருக்கிறது. எனக்கு பிடித்து இருக்கிறது. முதல்வர் நன்றாக பேசுகிறார். எல்லோரும் நன்றாக ஆட்சி உள்ளது என்று பேசுகிறார்கள். அம்மா உணவகத்தை அடித்து உடைத்த போது உடனே அவர்கள் மீது ஆக்சன் எடுத்தது எல்லாம் பாராட்ட கூடிய விஷயம். இப்படி எல்லாம் பார்த்தது கிடையாது. சட்டசபை நிகழ்வுகளை எல்லோரும் பார்க்க வேண்டும் என்று விஜய் சேதுபதி குறிப்பிட்டார்.இந்த நிலையில்தான் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், விஜய் சேதுபதியிடம் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இருக்கும் புகைப்படத்தை காட்டி கேள்வி எழுப்பப்பட்டது. ஓ. பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சமி மறைவை அடுத்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். ஓபிஎஸ்சை அணைத்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் சொன்னார்.இந்த புகைப்படத்தை பார்த்து விஜய் சேதுபதி தற்போது பாராட்டி உள்ளார். இப்படித்தான் அரசியல் கடந்து செயல்பட வேண்டும். இப்படித்தாங்க இருக்கணும். துக்கத்தில் சேர்வது, துணையாக இருப்பது நல்ல விஷயம். கஷ்டமான நேரங்களில் ஆறுதலாகவும், உறுதுணையாகவும் இருப்பது முக்கியம். 

 

Tags :

Share via