வள்ளி, தெய்வானை சமேத கழுகாசல மூர்த்தி  திருக்கோவில்

by Editor / 20-09-2021 06:42:23pm
வள்ளி, தெய்வானை சமேத கழுகாசல மூர்த்தி  திருக்கோவில்

 

ராவணனால் ஜடாயு கொல்லப்பட்டார். ராமனால் இறுதிக் காரியங்கள் செய்யப்பட்டு ஜென்ம சாபல்யம் பெற்றார். இதை அனுமார் மூலம் அறிந்த ஜடாயுவின் தம்பி சம்பாதி என்ற கழுகு மகமுனிவர், ராமனிடம், தன்னால் தன் சகோதரனுக்கு ஈமக்கிரியை செய்ய இயலாமல் போயிற்றே, இதனா‌ல் ஏற்பட்ட பாவம் எப்போது தீரும்? எங்கு போய் இதைக் களைவது? என்றார். அதற்கு ராமன், நீ கஜமுகபர்வதத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி பூஜை செய்து வந்தால் இதற்கான விடை கிடைக்கும், என்றார். இதன் பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டன. முனிவர் கஜமுக பர்வதத்திலேயே தங்கியிருந்தார். அப்போது, முருகன் சூரபத்மனை வதம் செய்வதற்காக இவ்வழியாக வந்தார். அந்நேரத்தில் முனிவர்களையும், மக்களையும் சூரபத்மனின் தம்பி தாரகாசூரன் துன்புறுத்தி கொண்டிருந்தான். முருகன் தாரகாசூரனை ஐப்பசி பஞ்சமி திதியில் வதம் செய்தார். வதம் செய்த களைப்பு தீர, கஜமுக பர்வத த்தில் ஓய்வெடுத்தார். அவருக்கு தங்கும் இடம் தந்தார் சம்பாதி. அத்துடன் சூரபத்மனின் இருப்பிடத்தையும் காட்டினார். இதனால் மகிழ்ந்த முருகன், சம்பாதிக்கு முக்தி தந்தார். இதனால் சம்பாதி தன் சகோதரனுக்கு ஈமக்கிரியைகள் செய்ய முடியாத பாவம் நீங்கியது. கழுகு முனிவரான சம்பாதி வசித்த கஜமுக பர்வதமே அவரது பெயரால் "கழுகுமலை" என பெயர் பெற்றது.

 

Tags :

Share via