நெல்லை மாவட்டத்தில்  ஓரே நாளில் 1885 பேர் மனு தாக்கல்

by Editor / 21-09-2021 05:11:34pm
நெல்லை மாவட்டத்தில்  ஓரே நாளில் 1885 பேர் மனு தாக்கல்

 

நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று ஓரே நாளில் 1885 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர் . இதுவரை மொத்தம் 2996 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் , ஒன்றிய வார்டு உறுப்பினர் ஊராட்சி தலைவர் பதவி மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் என 2069 பதவியிடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கு கடந்த 15 –ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. 
 ஐந்தாவது நாள், மாவட்டம் முழுவதும் 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் திமுக, அதிமுக, உள்ளிட்ட அனைத்து கட்சிகள் , சுயேட்சைகள் மற்றும் ஊராட்சி தலைவர் பதவிக்கு என ஏராளமானவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர் .இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கூட்டம் அலை மோதியது. நேற்று மட்டும் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு ஆறு நபர்களும் ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு 162 பேரும் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 483 பேரும் , ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1234 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர் . மொத்தம் 1885 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர் 
 இதுவரை மாவட்டத்தில் பல்வேறு பதவிகளுக்கு 2996 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர் . நான்கு நாட்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் மந்தமாக இருந்த நிலையில் அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு பெற்றாலும் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

 

Tags :

Share via