சினிமா பாணியில்சென்னையில் ஓய்வு பெற்ற  காவல் ஆய்வாளரை கடத்திய கும்பல் கைது

by Editor / 06-10-2021 07:35:12pm
சினிமா பாணியில்சென்னையில் ஓய்வு பெற்ற  காவல் ஆய்வாளரை கடத்திய கும்பல் கைது

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் மூசா இவர் பல்வேறு தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரான இவர் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

செம்மரட்டைகளை எரித்து அதை ஏற்றுமதி செய்யும் வியாபாரத்தை இவர்அதிகாரபூர்வமாக ஒப்பந்தம் எடுத்து மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.இந்த நிலையில்தான் சென்னையில் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பணத்துக்காக கடத்தப்பட்டார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மகன் பஷீர் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். இவரிடம் ஏற்கனவே பணியாற்றிய குமார் என்கிற அறுப்பு குமார் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் இவரை கடத்தினார்கள்.


போரூரில் செட்டியார் அகரம் என்ற பகுதியில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் இவரை அடைத்து வைத்து உள்ளனர். கைவிலங்கு போட்டு மூசா குடிபோதைக்கு அடிமையானவர் என கூறி போதை மறுவாழ்வு மையத்தில் அடைத்து வைத்துள்ளனர்.இவர் முன்னாள் எஸ்ஐ என்பதாலும், கடத்தலுக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கலாம் என்பதாலும் உடனடியாக போலீசாருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் இந்த கடத்தல் குறித்து உடனடியாக விசாரணையில் குதித்தனர். இந்த நிலையில்தான் மூஸாவை கடத்தியவர்களிடம் இருந்து போன் வந்துள்ளது.இந்த நிலையில்தான் மூஸாவை கடத்தியவர்களிடம் இருந்து போன் வந்துள்ளது.மூஸாவின் மகனுக்கு போன் செய்த கடத்தல்காரர்கள், உங்கள் அப்பாவை விட்டுவிடுகிறோம். மூன்று கோடி ரூபாயை உடனடியாக நாங்கள் சொல்கிற இடத்தில் வந்து கொடுக்க வேண்டும் என்று கேட்டு உள்ளனர்.

இந்த புகாரை உடனடியாக கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.முதலில் கடந்த திங்கள் கிழமை தாம்பரத்திற்கு வந்து பணத்தை கொடுக்கும்படி அந்த கடத்தல் கும்பல் கூறியுள்ளது. ஆனால் திங்கள் கிழமை அந்த கும்பல் பணத்தை வாங்க தாம்பரம் வரவில்லை. இந்த நிலையில் நேற்று சென்னை எழும்பூரில் இருக்கும் தனியார் மால் அருகே வந்து பணத்தை கொடுத்துவிட்டு செல்லும்படி கடத்தல் கும்பல் கூறியுள்ளது.

அதேபோல் மூஸாவின் மகனும் பணத்தோடு சென்று அங்கு கடத்தல் கும்பலிடம் பணத்தை கொடுத்து மூஸாவை மீட்டு இருக்கிறார். சரியாக இந்த சம்பவம் நடந்த போது அங்கே வெவ்வேறு இடங்களில் போலீசார் கார்களில் மறைந்து மாறுவேடத்தில் இருந்தனர். சரியாக பணம் கைமாறியதும் வெளியே வந்த போலீசார் சினிமா பட பாணியில் கடத்தல் கும்பலை சேஸ் செய்து சுற்றி வளைத்து பிடித்தனர்.ராஜேஷ், பிரகாஷ், சங்கீதா, கருப்பு குமார் ஆகிய கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 2 கார்கள், 25 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் அறுப்பு குமார் என்பவர் மூஸாவிடம் பணியாற்றிய நபர்தான்..மூஸாவை கடத்தி பணம் பறிக்க முயன்ற தாகவும் அறுப்பு குமார் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via